மன்னார்புரம் பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

0 16
Stalin trichy visit

திருச்சி ஆக. 7  ​புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, மாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மல்லிகை நகரில் மனை வாங்கிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் மனைகளை, வருவாய்த்துறை பதிவேட்டில் பதிவுக்குப் புறம்பாகக் குளத்தூர் சார்பதிவாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
வருவாய்த்துறை பதிவேடுகளில் முறைப்படி மனை வாங்கியவர்களின் பெயரில் கிரையப்பத்திரம் மற்றும் பட்டா இருந்தும், நீதிமன்றத் தடையோ அல்லது வருவாய்த்துறை தடை மனுவோ இல்லாத நிலையில், பதிவுத்துறை சட்டத்திற்குப் புறம்பாக விளக்கம் கேட்டு ஆர்டிஓ எழுதிய கடிதத்திற்கு விளக்கம் அளிக்காமல், வழிகாட்டி பதிவேட்டில் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவை நிறுத்தி மல்லிகை நகரில் மனை வாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைப் பழிவாங்குவதைக் கைவிட வேண்டும். பத்திரப்பதிவை மீண்டும் தொடங்கி பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பேராட்டத்திற்கு மாநகர், மாவட்ட செயாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.