சாரநாதன் பொறியியல் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்களின் சமுதாய பணி
திருச்சி, நவ. 25 திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். பிரிவு மாணவர்கள் கிராப்பட்டியிலுள்ள செயின்ட் தாமஸ் மெர்சி இல்லத்திற்கு சென்று அங்கு தங்கியிருக்கும் முதியோர்களை சந்தித்து அவர்களுக்கு உதவிகளை வழங்கினார். செயின்ட் தாமஸ் மெர்சி இல்லத்தின் சீனியர் சுப்பீரியர் மாணவர்களிடம் உரையாற்றுகையில், ஒரு சேவை சார்ந்த நிறுவனத்தை நடத்துவதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கி கூறினார். மேலும் இந்த இல்லத்திலுள்ள முதியோர்கள் எந்த சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் விளக்கி உரையாற்றினார்.

58 தன்னார்வலர்கள் தாங்களாகவே முதியோர் இல்லத்திற்கு ரூ.9000 மதிப்புள்ள மளிகை, அரிசி, காய்கறிகளை வழங்க முன்வந்தனர்.