கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு வழங்கும் தண்ணீர் அளவு குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் : குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

0 24
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 19: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஏராளமானவர் கலந்து கொண்டு பேசி கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில இணைச் செயலாளர் கணேசன் பேசும் பொழுது கடந்த 3 ஆண்களில் கால்நடைகளுக்கான அடர், உலர் தீவனங்கள், புண்ணக்கு, பருத்தி கொட்டை, தானிய பொட்டு, தவிடு உள்ளிட்டவை விலை 100 சதவீதம் விலை ஏற்றம் கண்டுள்ளது கோத்ரேஜ், கிரிசி போன்ற தீவனங்கள் விலை மூட்டைக்கு ரூ.250 உயர்ந்துள்ளது. எனவே, பசும்பால் ஒரு லிட்டருக்கு ரூ 44 எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ம் வழங்க வேண்டும். என்று பேசினார்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பேசும் பொழுது நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ நெல்லை சாக்கில் எடுப்பதற்கு மாநில அரசு மூட்டை ஒன்றுக்கு ரூ.11 கொடுக்கின்றது. அவர்களுக்கு இது போதாதது. எனவே,  அவர்கள் விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு ரூ.60 லஞ்சம் கேட்கின்றனர். இதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு ரூ. 20 வழங்க வேண்டும். முதல்வர் விஜய், அனைத்து விவசாயிகள் வாங்கிய முழு கடன் தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பேசினார்:
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விசுவநாதன் பேசும் பொழுது விவசாயிகள் சங்க மாநில தலைவர் நடப்பாண்டு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பொய்த்து போனதால், அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 எழுப்பிடு வழங்க வேண்டும். ஆற்று பாதுகாப்பு கோட்டத்திலும், அறியாறு கோட்டத்திலும் தற்போது தூர் வாரும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதை விரைந்து முடிக்க மாட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும். சம்பா சாகுபடிக்கு ஐ ஆர் 20 விதை நெல் தடை இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சின்னத்துரை பேசும் பொழுது மேகதாதுவில் அணை கட்ட மத்திய நீர்வளத்துறை காவிரி மேலாண்மை ஆணையம் சுப்ரீம் கோர்ட் ஆகியவை, கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு விரிவான திட்டம் தயாரிக்க ஒப்புதல் வழங்கி உள்ளதை எதிர்த்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சகம் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பதையும், இந்த ஆண்டு ஜூன் 12ந்தேதி மேட்டூரில் காவிரி நீர் திறக்காததற்கு என்ன காரணம் என்பதையும் விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் விளக்க அறிக்கை வழங்க வேண்டும் கர்நாடகா அரசு மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது குறித்து விளக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்
இக்கூட்டத்தில் டிஆர்ஓ பாலாஜி தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரண்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) ஜெயராணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.