வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த முகாம்

0 429
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம்,  முசிறி சட்டமன்றத் தொகுதியில் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த முகாமில் 1332 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதியில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சுருக்கம் வரை திருத்த முகாம் நடைபெற்றது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெயர் சேர்க்க படிவம் 6ல் 732 விண்ணப்பங்களும், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7ல் 152 விண்ணப்பங்களும், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ல் 448 விண்ணப்பங்களும் சேர்த்து மொத்தம் 1332 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது விண்ணப்ப மனுக்களை கொடுத்து வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் முறையாக வருவதற்கான வழிமுறைகளை மேற்கொண்டனர்.
முகாமினை வட்டாட்சியர்கள் பாத்திமா சகாயராஜ், கண்ணாமணி தேர்தல் துணை வட்டாட்சியர்கள் கார்த்திக் மற்றும் செல்வி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.