பெரிய மாரியம்மன் கோயிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி
திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம், தா.பேட்டை பிள்ளாதுறை பெரிய மாரியம்மன் கோயிலில் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. வருடந்தோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் சுவாமி பாலித்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு கிராம விநாயகர், செல்லாண்டியம்மன், உடைப்பு கருப்பண்ண சுவாமி, சந்தி கருப்பு, நாகர் அரசு வேம்பு விநாயகர், பெரியமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பிள்ளாதுறை பெரிய மாரியம்மன் மற்றும் சந்தி கருப்பு ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இளநீர் பாலை உடைத்து வைத்து சுவாமி பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது விவசாயம் செழிக்கவும். நாடு சுபிட்சமாக இருக்கவும்,மழை வேண்டியும்,கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் நன்கு மழை பெய்யவும்,பொதுமக்கள் நோய் தாக்குதல் இன்றி நலமுடன் வாழவும், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பொதுமக்கள் மாவிளக்கு ,தேங்காய், பழம் படைத்து
பெரிய மாரியம்மனை வழிபட்டனர்.வரும் வியாழன் கிழமை இரவு குடி விடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.