கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

0 392
Stalin trichy visit

 

திருச்சி, நவ. 27 திருச்சி மாவட்டம்,  முசிறி, தொட்டியம், தா.பேட்டை பகுதியில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயில்களில் தீபம் ஏற்றியும் சொக்கப்பானை கொளுத்தியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

சந்திரமவுலீஸ்வரர், மகா மாரியம்மன், கள்ளத்தெருமாரியம்மன், சின்ன சமயபுரத்தாள், பாலத்து மாரியம்மன், முருகன் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், காளியம்மன், கருமாரியம்மன், உள்ளிட்ட ஆலயங்களிலும் தொட்டியம்
அனலாட்ஈஸ்வரர் சிவாலயம், தொட்டியம் மதுரை காளியம்மன், திருஈங்கோய்மலை
மரகதாசனேஸ்வரர் சிவாலயம், தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயம், பெரிய மாரியம்மன் கோயில். தேவனூர் சண்முககிரி மலையில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி, திருக்கோயில் என். கருப்பம்பட்டி முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் தீபம் ஏற்றியும் சொக்கப்பனை
எனும் கூம்புக்கு தீ வைத்து கொளுத்தியும் வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.
வீடுகளில் வாசலில் சுவாமி படங்கள், முன்பு பெண்கள் விளக்கேற்றி
வைத்து வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.