நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, நவ. 27 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன் கழக வளர்ச்சி குறித்தும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை கூட்டம்.
தீர்மானம். 1: இதயதெய்வங்கள் புரட்சிதலைவர் எம்ஜிஆர், புரட்சிதலைவி அம்மா ஆகியோரின் ஆசியுடன் மாண்புமிகு எதிர்கட்சிதலைவர் முன்னாள் முதல்வர் கழக பொதுச்செயலாளர் புரட்சிதமிழர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க உறுப்பினர்
முகவர்கள், சேர்க்கை மற்றும் புதுப்பிக்கின்ற பணியினையும் அதேபோல் வாக்குசாவடி மகளிர்குழு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைக்கின்ற பணியினை வேகமாகவும், விவேகமாகவும், முதன்மையாகவும் அமைப்பதற்கு அடித்தளமிட்ட அனைத்து நிலை கழக நிர்வாகிகளுக்கும், அப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டிருக்கின்ற அனைத்து உறுப்பினர்களுக்கும், நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கழக
தீர்மானம். 2 : உறுப்பினர் சேர்க்கை, வாக்குசாவடி முகவர், மகளிர்குழு, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைகளை முறையாக அமைத்து கழக பணியிலும், தேர்தல் பணியிலும் தொய்வில்லாமல் செயல்பட்டு நமது மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்று நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற தொடர்ந்து களபணியாற்றவும், அதை தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற ஊரக உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற பொதுதேர்தல்களில் 100% வெற்றிபெற தொடர்ந்து உழைப்போம் என சூளுரைப்போம்.
தீர்மானம். 3 :
நடைபெறவிருக்கின்ற தேர்தல்களில் கழகம் வெற்றிபெற ஏதுவாகவும், தோல்வியுற்ற மக்கள் விரோத, தி.மு.க அரசின் கையாலாகத தனத்தையும், சுயநல, குடும்பநல தி.மு.க.வின் செயல்பாடுகளை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் 300 இடங்களில் தெருமுனை பிரச்சாரங்களை நடத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விடியா தி.மு.க அரசின் செயல்பாட்டை தோலுரித்துக் காட்ட சபதமேற்போம்.
தீர்மானம். 4 : திருச்சி மாவட்ட வளர்ச்சிக்காகவும், மக்கள் நலனுக்காகவும் 2021-சட்டமன்ற பொதுதேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள், கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றாததை கண்டித்தும் லால்குடி, மணப்பாறை மற்றும் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிகளில், பொதுச்சசெயலாளர் அனுமதியை பெற்று மாபெரும் ஆர்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்துவதுகழக கண்டன என தீர்மானிக்கப்படுகிறது.