மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

0 308
Stalin trichy visit

தா.பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

 

மத்திய அரசு மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமுல்படுத்துவதை கண்டித்து தா.பேட்டை கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ்.பாண்டியன் தலைமை தலைமை வகித்து பேசினார். ஒன்றிய உறுப்பினர்கள்வீரவிஜயன், சேகர், சுப்பிரமணியன், முருகேசன்
காமராஜ் உள்ளிட்ட பலர் மத்திய அரசு மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமுல்படுத்துவதை தடைசெய்ய வேண்டும். இதனை தமிழக அரசும் அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டு மின்வாரிய கோட்ட உதவி பொறியாளர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை மனுவையும் வழங்கினர். கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.