முசிறியில் வீட்டின் கதவை உடைத்து நகைகள் திருட்டு
திருச்சி மாவட்டம் முசிறியில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகையினை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்முன்னாப் .
இவரது மனைவி ரிஹானா(38) இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், இந்நிலையில் ரிஹானா சனிக்கிழமை திருச்சி காஜாமாலையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றவர் ஞாயிற்றுக்கிழமை தனது
வீட்டில் இருந்த சிசிடிவி இணைப்பை தனது செல்போன் இணைப்பு வாயிலாக பார்த்துள்ளார். அப்போது இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக முசிறியில் உள்ள வீட்டிற்கு வந்த ரிஹானா அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்ட கீபோர்டில் வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகை , விலை உயர்ந்த 4 வெளிநாட்டு கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தது. இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் ரிஹானா கொடுத்த புகாரின் பேரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜான்சன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர்.போட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் தேடப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.