விஜயகாந்த் நலம் பெறவேண்டி தேமுதிகவினர் பிரார்த்தனை

0 493
Stalin trichy visit

திருச்சி, டிச. 4  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் தெற்கு ஒன்றிய தேமுதிகவின் சார்பில் மாவட்ட செயலாளர் பாரதிதாசன் வழிகாட்டுதலின் படி ஒன்றிய செயலாளர் வைரம் கே. குமார் தலைமையில் வைரம்பட்டி அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு காளியம்மன் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை பூரணமாக குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோட்டைக்கார முனியாண்டி சாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். அப்போது விஜயகாந்த் நலம்பெறவேண்டி முழக்கங்கள் எழுப்பினர். இதில் அவைத்தலைவர்‌ ஸ்வீட் பாலு, பொருளாளர் முத்தமிழ்ச்செல்வன், துணைச்செயலாளர்கள் அன்பரசன், வி.எம்.மணி, கே.எஸ்.சாதிக்பாட்ஷா, மாவட்ட பிரதிநிதிகள் முருகேஷ், வேல்முருகன், மற்றும் பாலன், பி.சக்திவேல், வேதமுத்து, ரெட்ராஜா, கருமன், ராஜா, சக்திவேல், பழனிச்சாமி, சக்திவேல், விஜி, சிவாகர், சசிகுமார், ராஜா, முத்துக்குமார், சண்முகம் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.