வைகுண்ட ஏகாதசி விழா முன்னேற்பாடு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, டிச. 5 திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர காவல் ஆணையர் காமினி, மாநகர காவல் துணை ஆணையர்கள அன்பு, செல்வகுமார், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி, ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.