மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு

0 58
Stalin trichy visit

திருச்சி, மே 27 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கே.பெரியபட்டி பிரிவு என்ற இடத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இந்நிலையில் இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொள்வதற்காக  நேற்று (மே 26) வருகை புரிந்தார்.
மணப்பாறை எம்எல்ஏ கதிரவன், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து சிப்காட் திட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொழிற்பேட்டை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அதன் பின்னர் அமைச்சர் கீர்த்தனா அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வுக்கு பிறகு சிப்காட் வளாகத்திலேயே மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சிப்காட்டில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை களை ஆய்வு செய்தார்.
அவருடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை அதிகாரிகள் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Leave A Reply

Your email address will not be published.