நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கான சிகிச்சை மையம் கட்டுமான பணி : மேயர் மு.அன்பழகன் ஆய்வு
திருச்சி, மே 27 திருச்சி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களுக்கான சிகிச்சை மையம் கட்டும் பணி நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன் மாநகராட்சி அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .
மாநகராட்சிமண்டலம் 1, வார்டு எண்.4 பஞ்சக்கரை, அம்பேத்கார் நகர் பகுதி நாய்களுக்கு சிகிச்சை மையம் கட்டும் பணி மண்டலம் 5, வார்டு எண்.11 கோணக்கரை பகுதி
மண்டலம் 3, வார்டு எண்.46 கொட்டப்பட்டு ஜே.ஜே.நகர் ,மண்டலம் 3, வார்டு எண்.36க்குட்பட்ட அரியமங்கலம் குப்பைகிடங்கு வளாகத்தில் தெருநாய்கள் பராமரிப்பதற்காக புதிதாக தெருநாய் காப்பங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதை மேயர் நேரில் ஆய்வு மேற்கொண்டார் .
தெருநாய்களுக்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) மையங்கள் இந்த புதிய இருப்பிடங்கள், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் அபிஷேகபுரம் ஆகிய நான்கு கோட்டம் இடங்களில் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு (ABC) மையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் ஏற்கனவே நாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய இருப்பிடங்கள், இந்த மையங்களுடன் இணைந்து செயல்படும். இந்த திட்டத்திற்காக சுமார் ₹1.20 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த இருப்பிடங்கள், நாய்களுக்கு ஒரு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான புகலிடமாக அமையும்.
திருச்சி மாநகராட்சி, தெருநாய் காப்பகங்களுக்கான சமீபத்தில் நகரம் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நகர எல்லைக்குள் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 43,767 என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில்,32000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநாய்க்கடி தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது என மேயர் மு அன்பழகன் தெரிவித்தார்கள் .
பின்னர் உறையூர் சாலை ரோட்டில் உள்ள அம்மா உணவகம் மற்றும் மண்டலம் 5 அருகில் உள்ள அம்மா உணவகத்தை மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரத்தை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.