தீண்டாமை ஒழிப்பு மினி மாரத்தான் போட்டி

0 272
Stalin trichy visit

திருச்சி, டிச.7  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருச்சி மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம் சமத்துவ சமுதாயம் காண்போம் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து துவங்கிய போட்டியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணை கண்காணிப்பாளர் சுப்பையா கொடியசைத்து துவக்கி வைத்தார். கோவில்பட்டி சாலை , திருச்சி சாலை, புதுத்தெரு வழியாகச் சென்று பேருந்து நிலையம் அருகே போட்டி முடிவுற்றது. இதில் முதல் மூன்று இடங்களைப்பிடித்த மாணவர்களுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. மாரத்தானில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு மெடல்கள் அணிவிக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.