மலைக்கோட்டை கோயில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

0 252
Stalin trichy visit

மலைக்கோட்டை கோயில் உள்ளே அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை – பரிகார பூஜைக்கு பின்னர் நடை திறப்பு.

திருச்சி, டிச. 19 திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில், கடந்த ஏழு வருடங்களாக தற்காலிக தூய்மை பணியாளராகவும் கடந்த ஆண்டு நிரந்தர தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த பொன்னப்பன் மகன் ஜெகன்(வயது 28) என்பவர் இன்று (19.12.23) அதிகாலை 5 30 மணி அளவில் கோயில் வளாகத்தில் யானை கட்டும் இடத்திற்கு எதிரில் உள்ள அலுவலக அறையில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை.

இதுகுறித்து கோட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலில் மரணம் ஏற்பட்டது காரணமாக உடனடியாக பரிகார பூஜை நடத்தி காலை 9 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.