காவிரி ஆற்றில் வாலிபர் பிணம்; அனாதையாக நின்ற காரால் பரபரப்பு

0 318
Stalin trichy visit

திருச்சி ஓயாமாரி சுடுகாடு எதிர்ப்புறம் உள்ள காவிரி ஆற்றில் நேற்று இரவு காவிரி ஆற்றின் தண்ணீரில் இழுத்து வரப்பட்டு கரை ஓரமாக உடலில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க, ஜட்டியுடன் கிடந்த ஆண் பிணத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து கரை ஓரத்தில் இழுத்து போட்டனர்.

இது குறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று மதியம் முதல் காவிரி ஆற்றின் பாலத்தில் ஒரு கார் அனாதையாக கேட்பாரற்ற நிலையில் இருந்ததால், இறந்தவருக்கும், இந்த காருக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.