எம்.பி.க்கள் இடைநீக்கம் ஜனநாயக படுகொலை: வைகோ பேட்டி
திருச்சி, டிச. 23 திருச்சி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..
மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கும் போது நிவாரணத்திற்காக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக முதல்வரின் நேரத்தை மாற்றி இரவு 10.30 மணிக்கு சந்திக்கலாம் என்று சொல்வது பிரதமரின் பொறுப்பேற்ற தன்மையை காட்டுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பிரதமர் பாராமுகமாகவே இருக்கிறார்.
146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை மத்திய மோடி அரசு ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது.