மாற்றுத்திறனாளிகள் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்

0 310
Stalin trichy visit

சிறுகனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்.

உலக மாற்றுத்திறனாளிகளுக்கான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் சிறுகனூரில் உள்ள வாய்ஸ் அறக்கட்டளையின் நட்புறவு குழந்தைகள் இல்லத்தில் டிசம்பர் 23 அன்று நடத்தப்பட்டது. திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளை நோக்கமாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வாய்ஸ் அறக்கட்டளை நிர்வாகி திருமதி.ஏ.ஜேனட் ப்ரீத்தி மற்றும் பணியாளர்கள் திருமதி.ஆர்.கவிதா, திருமதி.ஆர்.விக்டோரியா, திரு.ஆர்.பிரகாஷ் ராஜ், திரு.கே.மணிகண்டன், திரு.ஜே.பிரகாஷ் குமார், திரு.எம்.பொன்னார், திரு.எஸ்.சிவா, திருமதி.மேரியம்மா மற்றும் சமூகப் பணி மாணவர்களின் தன்னார்வக் குழுவுடன் வி.தனலட்சுமி, பி.மணிகண்டன், எம்.ஜெயக்குமார், பி.ஷரோன் ஐடா, பி.விஸ்வநாதன் ஆகியோருடன் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த நிகழ்ச்சி 10 மணிக்கு தொடங்கியது: வாய்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் A.ஜெசிந்தா வரவேற்புரையாற்றினார்.

மத்திய சிறை மேலாளர் கவிஞர்.அ.திருமுருகன் உலக மாற்றுத்திறனாளிகள் தின உரை நிகழ்த்தி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து, திருச்சி வாய்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் A.கிரிகோரி  அறிமுகம் செய்துவைத்த புனித ஜோசப்த் கல்லூரியின் தாளாளர் ரெவ.டாக்டர்.பவுல்ராஜ் மைக்கேல் கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தியை வழங்கினார். கிறிஸ்மஸ் பரிசுகளை அருட்தந்தை.ஏ.ஆன்டனி மற்றும் அருட்தந்தை ஆர்.வின்சென்ட் ஃபெரர் ஆகியோர் வழங்கினர்.

வாய்ஸ் அறக்கட்டளை, ஊனமுற்றோர் மேம்பாட்டுத் திட்டத்தின் பணியாளர் உறுப்பினர் திருமதி.ஆர்.விக்டோரியா புத்தாண்டு வாழ்த்துகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போட்டிகள் பின்வருமாறு, கோலம் போட்டி, பலூன் வெடித்தல், நீர் நிரப்புதல் மற்றும் நினைவாற்றல் விளையாட்டு நடத்தப்பட்டது, இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சிறுகனூர் ஊராட்சித் தலைவர் திருமதி.இந்திராணி கண்ணையன் மற்றும் சிறுகனூர் ஒன்றிய ஆலோசகர் திரு.ஆர்.செந்தில் குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சி மதிய உணவு மற்றும் சிற்றுண்டியுடன் இருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த நிகழ்ச்சியில், 330க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், 120 பராமரிப்பாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியை கனடா டிரினிட்டி இன்ஸ்டிட்யூட் அனுசரணை செய்து ஏற்பாடு செய்தது.

Leave A Reply

Your email address will not be published.