லால்குடி அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பறவைகள் அறிமுக நிகழ்வு
திருச்சி, நவ.2 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தண்ணீர்பந்தலில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் வலசைப் பாதை நிறுவனம் சார்பாக இன்று லால்குடியில் உள்ள St. John’s Nursery and Primary School பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பறவைகள் அறிமுக நிகழ்வு அதிகாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இயற்கையின் அழகையும், பறவைகளின் வாழ்வியலையும் நேரடியாகக் கண்டு ரசித்தனர்.
பறவைகளை அடையாளம் காண்பது, அவற்றின் வாழ்விடங்கள், உணவுப் பழக்கங்கள், வலசைப் பயணங்கள் மற்றும் நீர்நிலைகளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.பாடப்புத்தகங்களில் படிக்கும் இயற்கையை நேரில் அனுபவிப்பதே உண்மையான கற்றல்.இன்றைய குழந்தைகளுக்கு இயற்கையை அறிமுகப்படுத்தினால், நாளைய தலைமுறை இயற்கையைப் பாதுகாக்கும்.
இந்த அழகான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கும், ஆர்வத்துடன் பங்கேற்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவச் செல்வங்களுக்கும் எங்களது வலசைப்பாதை சார்பாக நிறுவனர் உழவன் ஜெகன் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.