விஜய் ரசிகர்கள் பாணியில் தனுஷ் ரசிகர்கள் : தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கவுரவிப்பு

0 23
Stalin trichy visit

திருச்சி, நவ.2  விஜய் ரசிகர்கள் பாணியில் தனுஷ் ரசிகர்கள் தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கவுரவிப்பு .

நடிகர் தனுஷ் நற்பணி மன்ற கொடி மற்றும் லோகோவை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தீர்மானம்

திருச்சி மாவட்ட தலைமை தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் இன்று திருச்சி தென்னூர் பகுதியில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்குப் சேலை , இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் இளங்கோ ஆகியோர் வழங்கினர்.

நடிகர் விஜய் ரசிகர்கள் தற்பொழுது அரசியல் கட்சி தொண்டர்களாக மாறியுள்ள நிலையில் அவரை பின்பற்றி தனுஷ் ரசிகர்களும் நற்பணி மன்றக்கொடி லோகோ உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தனுஷ் அறிவுறுத்தலின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் தனுஷ் நற்பணி மன்ற கொடியை ஏற்ற நிர்வாகிகளை வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில், மாவட்டத் தலைவர்  M. செந்தில் குமார், மாவட்டச் செயலாளர் T. இளங்கோ, மாவட்ட சட்ட ஆலோசகர்  பிரசாத், மாவட்ட IT Wing ஆலோசகர், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட மகளிர் அணியினர் மற்றும் நகர, பகுதி,  ஒன்றிய நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.