தொட்டியத்தில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் 17 வயதிற்குட்பட்ட பள்ளி அளவில் பெண்களுக்கான தேசிய கைப்பந்து போட்டி.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான தேசிய அளவிலான கைப்பந்து போட்டி
தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் 67 வது தேசிய பள்ளி விளையாட்டில் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கான தேசிய அளவிலான கைப்பந்து போட்டியினை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சசிகலா தலைமை வகித்தார் . சென்னை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா கல்லூரி தலைவர் பெரியசாமி
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி பீகாரையும் மேற்கு வங்க அணி மகாராஷ்டிராவையும் ராஜஸ்தான் அணி ஐபிஎஸ்சி அணியையும் வென்றன. நடைபெற்று வரும் இப்போட்டியில் 30 மாநில அணிகள் கலந்துகொண்டு உள்ளன. போட்டிகள் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி முப்பதாம் தேதி நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட பள்ளி கல்வித்துறை
செய்துள்ளது.