மதுரை காளியம்மனுக்கு 31 பவுன் மதிப்பில் புதிய மாங்கல்யம்

0 498
Stalin trichy visit

முசிறி அருகே தொட்டியம் மதுரை காளியம்மனுக்கு பரிகார பூஜை செய்து 31 பவுன் மதிப்பில் புதிய மாங்கல்யம் அனுபவிக்கப்பட்டது.

திரளான பக்தர்கள் பங்கேற்பு.

தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் மதுரை காளியம்மனுக்கு மாங்கல்யம் சாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் மதுரை காளியம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தினால் ஆன தாலி மாங்கல்யம் ஆகியவற்றை அண்மையில் பலே திருடன் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் அவரது மனைவி நித்யாவுடன் சேர்ந்து பட்டப்பகலில் திருடி சென்றார். இது குறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் திருட்டு வாலிபரை அவரது மனைவியுடன் கைது செய்து சுவாமியின் தாலியை , தங்க கட்டியாக மீட்டனர்.
இதையடுத்து தொட்டியம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தங்கள் சார்பாக மதுரை காளியம்மனுக்கு புதிதாக தங்கத்தினால் ஆன மாங்கல்யம் 31 பவுன் மதிப்பில் செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று கோயில் வளாகத்தில் சிறப்பு பரிகார யாக பூஜை நடத்தப்பட்டுமுசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் மதுரை காளியம்மனுக்கு புதிய மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் முத்தையன்,அறங்காவலர் குழு தலைவர் விஜய் ஆனந்த், பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, செயல் அலுவலர் பிரகந்தநாயகி, கோவில் ஆய்வாளர் ஆனந்த்,18 பட்டியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.