தண்ணீர் அமைப்பின் சார்பில் பனை விதைப்பு

0 1,008
Stalin trichy visit

தண்ணீர் அமைப்பின் சார்பில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பனை விதைப்பு நடைபெற்றது.

புத்தாண்டு தொடக்கமாக மாநில விதை, மாநிலம் காக்க விதை, என்ற நோக்குடன் பனை விதைக்கப்பட்டது.

மண் வளம், நிலத்தடி நீர் வளம், காத்திடும் பனை வேர் முதல் உச்சி வரை மண்ணுக்கும் உயிர்களுக்கும் பயன்தரக் கூடிய மாநில மரமாகும்.

பனையோலை, நுங்கு, பதனீர், பனங்கிழங்கு, என நீள்கிறது இதன் பயன்பாடு, பெரும் புயல், பேரிடர் காலங்களில் புயலின் வேகத்தைக் குறைத்து நிலங்களை காத்திடும் மரம். எனவே இதன் சிறப்பை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவும் அடுத்துவரும் வளரும் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் பனை விதைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார், கலைக் காவிரி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் செயலாளர் கி.சதீஷ் குமார் முன்னிலை வகித்து ஒருங்கிணைத்தார்.

அந்தநல்லூர் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் அவர்கள் புது வருடத்தின் தொடக்கம் பனை விதைகள் விதைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் ஆயிரம் பனை விதைகளை மாணவர்களை வைத்து விதைத்திட வழங்கப்பட்டது.
ஷபி அகமது, கிருஷ்ண குமார்
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.