வாலிபரை கத்தியால் குத்திய 3 பேர் மீது வழக்கு

0 293
Stalin trichy visit

திருச்சி, ஜன. 3 திருச்சி மாவட்டம்,  காட்டுப்புத்தூர் அருகே உள்ள பாலபுரம் பொன்னுசாமி மகன் முருகேஸ்வரன் ( 39 ) இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த கௌதம்
( 22 ) என்பவருக்கும் இடையே கடைந்த 31 ஆம் தேதி வாய் தகராறு ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து கௌதமின் தாயிடம் முருகேஸ்வரன் முறையிட்டதாக தெரிய வருகிறது இந்த சம்பவத்திற்கு பின் பாலபுரம் சமுதாய கூடம் அருகே நின்று கொண்டிருந்த முருகேஸ்வரனை அதே ஊரைச் சேர்ந்த கவி பாலன் (28 )கௌதம் ( 22 ) முருகேசன் (55) ஆகிய மூன்று பேரும் நீ எப்படி தகராறு குறித்து கௌதம் அம்மாவிடம் கூறலாம்? என குடிபோதையில் கத்தியால் முருகேஸ்வரனை மார்பு இடுப்பு நெற்றியில் குத்தி கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த முருகேஸ்வரன் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து முருகேஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்கு பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்தி தப்பி ஓடிய மூன்று பேரை வலைவீசி தேடி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.