காட்டுப்புத்தூரில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூரில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமினை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முகாமில் வருவாய் துறை, மின்வாரியம், பொதுப்பணித்துறை மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து 700க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள்
பெற்றபட்டது.
முன்னதாக துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பேசினர். முசிறி கோட்டாட்சியர் ராஜன் முகாமை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல்அமீது, பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத் தலைவர் சுதா சிவ.செல்வராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.