சித்தமல்லியில் உழவன் செயலி மற்றும் விவசாய கடன் அட்டை விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

0 16
Stalin trichy visit

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சித்தமல்லி கிராமத்தில் உழவன் செயலி மற்றும் விவசாய கடன் அட்டை குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம் அளித்தனர். கீழ்வேளூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் உழவன் செயலியின் பயன்பாடு குறித்தும் விவசாய கடன் அட்டையின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். உழவன் செயலி என்பது தமிழ்நாடு அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ மொபைல் செயலி ஆகும். 2018 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்குகிறது.
முக்கிய சேவைகள் மானியத் திட்டங்கள், இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு, உரங்கள் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வேளாண் இயந்திரங்கள் வாடகை, சந்தை விலை நிலவரம்,
வானிலை அறிவுரைகள், உழவர் – அலுவலர் தொடர்பு, பண்ணை வழிகாட்டி, இயற்கை / அங்ககப் பண்ணைப் பொருட்கள், FPO தயாரிப்புகள், பூச்சி / நோய் கண்காணிப்பு,
உழவன் இ-சந்தை (e-Market), என 24 சேவைகளை வழங்குகிறது. விவசாய கடன் அட்டை மூலம் விவசாயிகள் எளிமையாக வங்கிக் கடன்களை பெற முடிகிறது. விவசாய கடன் அட்டையை பெற வணிக வங்கிகள் கூட்டுறவு வங்கி கிராமப்புற வங்கிகள் ஆகியவற்றின் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை ,அடங்கல் கணினி சிட்டா, புகைப்படம். நிலம் வைத்துள்ள விவசாயிகள், குத்தகை மற்றும் பங்கு விவசாயிகள், கால்நடை, பால் பண்ணை, மீன்வள தொழிலாளர்களும் விவசாய கடன் அட்டையை பெறலாம். இரண்டு லட்சம் வரை பிணையம் இல்லாத விவசாய கடன் வழங்கப்படும். கடன் காலம் பொதுவாக 5 ஆண்டுகள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய விவசாய கடன் பெற வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.