திருச்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா
திருச்சி, ஜன.12 திருச்சி மாநகராட்சி 5 ஆவது மண்டல குழு அலுவலகத்தில் மண்டல குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், பங்கஜம் மதிவாணன், சோபியா விமலா ராணி மற்றும் உதவி வருவாய் அலுவலர் துரை, நிர்வாக அலுவலர் வசந்தி, கண்காணிப்பாளர்கள் புனிதவதி, சிராஜ்நிஷா இளநிலை பொறியாளர் ரமேஷ், , சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல், கரும்புகள், இனிப்புகள் வழங்கப்பட்டது.