கனிமவளம் – சுரங்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை

0 14
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 16 திருச்சி மாவட்டம் மணப்பாறைமற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனிம வள கொள்ளை நடைபெறுவதாக கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சோழிங்கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மறித்து ஆவணங்கள் சரி பார்ப்பில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாததால் லாரியை பறிமுதல் செய்த நிலையில் லாரி ஓட்டுநர் அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மணப்பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.