ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம்

0 289
Stalin trichy visit

மணப்பாறை அருகே ஆசிரியர் இயக்கங்களின் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கோவில்பட்டியில் மருங்காபுரி வட்டார கல்வி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசாணை 243-யை ரத்து செய்ய வலியுறுத்தியும், 2023 அக்டோபர் 12-ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 அம்ச கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தக் கோரிக்கை மூலமாக ஆர்ப்பாட்டத்தில் சுமார் 90 ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

Leave A Reply

Your email address will not be published.