ஸ்ரீ வெற்றிலை ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

0 221
Stalin trichy visit

மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் ஸ்ரீ வெற்றிலை ஆஞ்சநேயர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு – நபார்டு வங்கியின் சுதந்திர இயக்குநரும், பாஜக மாநில பொதுச் செயலாளருமான இராம சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அண்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றிலை ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று அனுமான் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. உலக பொது மக்களின் நன்மைக்காகவும் முறையான மழைப்பொழிவு வேண்டியும் உலகம் பொதுமக்கள் இடையே அமைதியும் சமாதானத்தையும் நிலை நிறுத்த வேண்டியும் யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக நபார்டு வங்கியின் சுதந்திர இயக்குனரும் பாஜக மாநில பொதுச் செயலாளருமான பேராசிரியர்.இராம சீனிவாசன் பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற இராம சீனிவாசன் பொதுமக்களிடம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் ராமர் கோயில் பிரசாதங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இராம சீனிவாசன் அயோத்தி ராமர் ஆலயத்தின் வரலாறும் சட்ட ப் போராட்டங்கள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கினார். விழாவில் பாஜக மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட பொதுச்செயலாளர் பொண்ணுவேல், மாவட்ட துணை தலைவர் லோகநாதன், சட்டமன்ற பார்வையாளர் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் கோபிநாத், நகரத்தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பல பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.