திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு

0 477
Stalin trichy visit

திருச்சி, ஜன.25 திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் கலைஞர் சிலையை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழா திருச்சி தெற்கு மாவட்டத்தில் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76 ஆவது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட டி.வி.எஸ். டோல்கேட்டில் அமைந்துள்ள கலைஞர் சிலையை தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஸ் பொய்யாமொழி தலைமையில், முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலைஞர் சிலையை திறந்து வைத்து வாழ்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.