முசிறி எம்.ஐ.டி. போதி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு போட்டி
திருச்சி, ஜன.25 முசிறி எம்.ஐ.டி போதி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் 2023-24 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விழாவிற்கு எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார். எம்ஐடி கல்வி நிறுவனங்களின் செயலாளர் மோனிகா பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் விளையாட்டுத்துறை அதிகாரியாக பணிபுரியும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பு பெற்றவருமான செல்வி தனலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி சிறப்புரையாற்றினார் பள்ளியின் முதல்வர் நிஷா மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி நன்றி கூறினார்.
பள்ளியின் ஆலோசகர் கௌரி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.
உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோர் விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாக செயல்பட்டனர்.