அதிமுக மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

0 362
Stalin trichy visit

திருச்சி, ஜன. 26  திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தி மொழி திணிப்பை எதிர்த்து மொழிப் போராட்டத்தில் அன்னை தமிழுக்காக இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வாக
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பில் திருச்சி மலைக்கோட்டை சறுக்கு பாறை பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.