கிராம சபை கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், புலிவலம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். இந்நிகழ்வில் முசிறி ஒன்றியக்குழுத் தலைவர் மாலா இராமச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ராஜன், மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சக்திவேல், மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொ) உமாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், அண்ணாதுரை, புலிவலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.