கிணற்றில் தவறி விழுந்து தத்தளிக்கும் காட்டெருமை
திருச்சி, ஜன.29 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுப்பட்டியில் உள்ள செம்மலை பகுதியில் காட்டெருமைகள் உள்ளது. இந்நிலையில் மலை அடிவாத்தில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்தில் இன்று காலை காட்டெருமை ஒன்று நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்த உரிமையாளர் இது தொடர்பாக மணப்பாறை வனதுறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சென்று பார்த்த போது சுமார் 20 அடி நீர் இருப்பதும் சுமார் 8 வயதான காட்டெருமை கீழே விழுந்த ஆக்ரோசத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மூலம் கால்நடை மருத்துவர்கள் மூலம் காட்டெருமையை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நீர் அதிகமாக இருப்பதால் தண்ணீரில் காட்டெருமை நீந்திக் கொண்டே இருக்கிறது.