கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மீட்பு

0 327
Stalin trichy visit

மணப்பாறை அருகே  கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி மீட்கப்பட்டு
வனப்பகுதியில் விடப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுப்பட்டி அருகே உள்ள செம்மலை பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளது. இந்நிலையில் இன்று காலை மலை அடிவாரத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் சுமார் 6 வயது மதிக்கத்தக்க பெண் காட்டெருமை தவறி விழுந்து தண்ணீரில் சுமார் 20 அடி நீரில் நீந்தியபடி தத்தளித்துக் கொண்டே இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மணப்பாறை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் சென்று பார்த்த போது காட்டெருமை ஆக்ரோசமாக கிணற்றில் இருப்பது தெரியவந்ததை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவக்குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி கால்நமை மருத்துவக்குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தியதை அடுத்த காட்டெருமையை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்ட கிரேன் மூலம் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. சிறிது நேரம் மயக்கத்தில் தள்ளாடிக் கொண்டிருந்த காட்டெருமை பின்னர் அங்கிருந்து சென்று விட்டது.

Leave A Reply

Your email address will not be published.