சிறுபான்மையினர் அதிமுகவை ஆதரிக்கின்றனர் : திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

0 321
Stalin trichy visit

பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிக்கின்றனர் – திருச்சியில் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

திருச்சி, பிப். 1  மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் – ன் 107 வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சி, உறையூர், குறத்தெருவில் அதிமுக பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் பூபதி ஏற்பாட்டில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா, மகளிர் அணி செயலாளர் நசீமா பாரிக், பகுதி கழகச் செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, அன்பழகன், முஸ்தபா, ஐடி விங்ஸ் மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு உள்ளிட்ட அதிமுகவினர் பலர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன்…

அதிமுகவும் மோடி தான் மீண்டும் பிரதமர் என கூறி வந்தோம். ஆனால் பாஜக தொண்டர்களோ அடுத்த முதல்வர் அண்ணாமலை தான் என முழக்கமிடுகின்றனர். அதிமுகவினர் என்ன இளிச்சவாயர்களா? மோடியை மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர வைக்க அதிமுக பாடுபடும். ஆனால் தமிழக முதல்வர் அண்ணாமலை என நீங்கள் முன்னிறுத்துவதா? என கேள்வி எழுப்பினார். எடப்பாடியார் ஆண்மையோடு
பாஜக கூட்டணியை விட்டு வெளியேறியதால் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மனதார அதிமுகவை ஆதரிப்பதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.