பால் விலை உயர்வை கண்டித்து : சி.பி.ஐ ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப்.1 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கோவில்பட்டி சாலையில் உள்ள R.985 மணப்பாறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்க வளாகம்அருகில் அரசு உத்தரவு இல்லாமல் பொது மக்களுக்கு விற்கும் பால் விலை ஒரு லிட்டர் ரூ. 45-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரகுழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் தங்கமணி தலைமை வகித்தார். சௌக்கத்அலி ராகமத்துனிஷா, மரியராஜ் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி மாநில துணை பொது செயலாளர் சுப்ரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் ஜனசக்தி உசேன் நகர்மன்ற உறுப்பினர் மனோன்மணி ஆகியோர் உரை நிகழ்தினார்கள்
நகரகுழு உறுப்பினர்கள் 19, 20 வது வார்டு பொது மக்கள் மணப்பாறை நகரத்தில் இயங்கி வரும் R.985 மணப்பாறை பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் பொது மக்களுக்கு விற்கும் பால் விலைரூ. 45-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியதை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.