அனுமதியின்றி கள் இறக்கியவர் கைது

0 306
Stalin trichy visit

திருச்சி, பிப்.5  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே கொணலை கிராமத்தில் அனுமதியின்றி கள் இறக்கியவரை நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கொணலை கிராமத்தில் அனுமதியின்றி கள் இறக்கி விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் கொணலை கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி கள் இறக்கி விற்றவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வீர கவுண்டர் நாடார் தெருவை சேர்ந்த  மணிகண்டன்(35) என தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்த தனிப்பிரிவு போலீசார் சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுகனூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.