சாலை விபத்தில் கணவன் பலி- மனைவி படுகாயம்
திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலையில் மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் கணவன் பலி. மனைவி படுகாயம்.
பாண்டிச்சேரி கண்வாபேட்டை கப்பகாரதெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(28). இவருடைய மனைவி மதுமிதா (27). கணவன் மனைவி இருவரும் பாண்டிச்சேரியில் இருந்து காரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொணலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கணவன், மனைவி மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணவர் கோபிநாத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயம் அடைந்த அவரது மனைவியை சிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.