சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0 333
Stalin trichy visit

திருச்சி, பிப்.14  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலபணித்திட்ட மாணவ,மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ,மாணவ,மாணவிகள் YRC மற்றும் லால்குடி போக்குவரத்து காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைப்பெறறது
.
லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாரியம்மாள், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் ஆகியோர்களின் வழிகாட்டுதல்களுடன் லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ,மாணவிகள், YRC மற்றும் லால்குடி போக்குவரத்து காவல்துறை இணைந்து இன்று லால்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி லால்குடி நகர்மன்றத் தலைவர் துரைமாணிக்கம்,லால்குடி ஒன்றியப் பெருந்தலைவர் ரவிச்சந்திரன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ்,Dr.சுலைமான்,நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் M.சக்திவேல்( NSS Unit-1 )YRC ஒருங்கிணைப்பாளர்  சுகன்யா (NSS unit II) ஆகியோர்களின் முன்னிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து கோர்ட், சந்தைப்பேட்டை, ரவுண்டானா, பேருந்து நிலையம் வழியாக வந்து அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பேராசிரியர்கள் , முனைவர் ராஜா, முனைவர் இளமதி தமிழ்மணி, அகஸ்டின் கிறிஸ்டோபர் ஆனந்த் , முனைவர் சங்கீதா,முனைவர் அங்கையர்கண்ணி, முனைவர் கனகராஜ், தீபாதேவி, முனைவர் சிவகாமசுந்தரி, சிவகாமி, காமினிபொன்சேகா,  தனகார்த்திகை காவல்துறை ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியாக சென்று நிறைவு செய்தார்கள் .

Leave A Reply

Your email address will not be published.