ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி போக்குவரத்து மாற்றம்

0 238
Stalin trichy visit

திருச்சி, பிப். 16 நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் அலகின் மூலம் திருச்சி மாவட்டம், இலால்குடி தாலுக்கா, மணக்கால் சிறுதையூர் செங்கரையூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு எண் எல்.சி.226க்கு மாற்றாக ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது. ரயில்வே மேம்பாலம் பணியையொட்டி சிறுதையூர் – செங்கரையூர் சாலையில், லால்குடி ரவுண்டானா முதல் கொப்பாவளி வரை இன்று (பிப்.16) முற்பகல் 6.00 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
புதிய போக்குவரத்து மாற்றம்: லால்குடியிலிருந்து அன்பில் செல்லும் மற்றும் திரும்ப வரும் அனைத்து வாகனங்களும் லால்குடி ரவுண்டானாவிலிருந்து சிறுதையூர் செங்கரையூர் சாலை வழியாக, திருச்சி- சிதம்பரம் சாலை, பூவாளூர் -ஆலங்குடி சாலை, காட்டூர் கரும்பு அபிவிருத்தி சாலை வழியாக கொப்பாவளி வழியாக செல்ல வேண்டும். மேற்கண்ட போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.