அனுமதியின்றி மண் கடத்திய லாரி பறிமுதல்

0 366
Stalin trichy visit

திருச்சி, பிப். 17 திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள உப்பிலியபுரம் பகுதிகளில் மண் மற்றும் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக திருச்சி புவியியல் மற்றும் சுரங்கத்துறை துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் உதவி இயக்குநர் பாலமுருகன் மற்றும் உதவி புவியியலாளர் ஜெகதீசன் ஆகியோர் துறையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பச்சபெருமாள்பட்டி பகுதியில் வேகமாக வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்திய பொழுது, லாரியை நிறுத்திவிட்டு அதன் தப்பியோடிவிட்டார். லாரியை சோதனை செய்ததில் முறையான அனுமதியின்றி மண் கடத்தப்பட்டது தெரியவந்ததன். இதன் பேரில் உதவி இயக்குநர் பாலமுருகன் உப்பிலியபுரம் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசரணை செய்ததில் லாரியை ஒட்டி வந்தவர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பது தெரிய வந்தது மேலும் லாரியின் உரிமையாளர் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.