திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

0 254
Stalin trichy visit

திருச்சி, பிப். 17 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான முறையில் பணியாற்றி, நமது திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை மூன்றுக்கு / மூன்று என வெற்றியடைய செய்ய அயராது பாடுபடுவது என்றும், புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவினை நமது மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நிலைகளிலும் சிறப்பான முறையில் நடத்துவது என்றும், வரும் 23.02.2024 அன்று வாழவந்தான் கோட்டையில் அருகருகே அமைக்கப்பட்டுள்ள இரட்டை சுங்கசாவடிகளை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தினை சிறப்பான முறையில் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் தெருமுனை பிரச்சாரங்களை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கும் கழக நிர்வாகிகளுக்கும், கழக தொண்டர்களுக்கும் இக்கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.