பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை

0 280
Stalin trichy visit

பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனம் கண்டறியப்பட்டுள்ளதால், உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரோடமைன் பி என்ற செயற்கை நிறமூட்டி பஞ்சு மிட்டாய்களில் சேர்க்கப்படுவது பெரும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் இதற்கு தடை விதித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி கடற்கரை, கோவில் திருவிழாக்கள், தெருக்கடைகள் என எங்கும் பஞ்சு மிட்டாய் விற்கப்படாது.

Leave A Reply

Your email address will not be published.