நவல்பட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடம் காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, பிப். 17 திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருச்சியில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் பேசுகையில்….
தமிழகம் முழுவதும் எட்டு தகவல் தொழில் நுட்ப பூங்காக்களை திறந்து வைப்பதாகவும் தமிழகத்தில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞர் கருணாநிதி டைட்டில் பூங்காவை அமைத்துக் கொடுத்தது தான் முக்கிய காரணமாகும்.
திருச்சி மாவட்டத்தில் பஞ்சப்பூர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் பகுதியில் ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் புதிதாக தகவல் தொழில்நுட்ப தொடங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளதற்கும் நன்றி தெரிவிப்பதோடு அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் 59.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டடம் அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் இந்த கட்டடம் தரை தளத்துடன் நான்கு மேல் தளங்களை கொண்டுள்ளது.. இவ்வாறு அவர் பேசினார்..
இந்த விழாவில் தகவல் தொழில் நுட்ப மேலாளர் புவனேஸ்வரி, திருவரம்பூர் தாசில்தார் ஜெயபிரகாஷ், திருவரம்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிஷன் சிங்,ஒன்றிய கவுன்சிலர் கயல்விழி, நவல்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.