சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

0 265
Stalin trichy visit

திருச்சி, பிப். 17  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் இவரது மகன் அரவிந்தன் (19) துறையூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கடைவீதியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டு இருந்த முதியவர் வைத்திருந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். சாலை ஓரம் நின்று கொண்டிருந்த சின்னசாமி என்ற முதியவர் படுகாயமடைந்து துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.