உத்தமர் கோவிலில் அரசுத் பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி சிறப்பு ஹோமம்

0 190
Stalin trichy visit

திருச்சி, பிப். 19  உத்தமர்கோயிலில் 10 மற்றும் 12 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற அருள்மிகு ஞானசரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி அருள்மிகு ஞான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம்  நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது.

மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவிகளும் குடி கொண்டிருக்கும் அருள்மிகு உத்தமர்கோயில் பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் அமைந்துள்ளது.அரசுப் பொது தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஞானசரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி அடுத்த மார்ச் மாதம் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இந்நிலையில் வருகின்ற பொதுத் தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி உத்தமர் கோயிலில் உள்ள அருள்மிகு ஞானசரஸ்வதி தேவிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் திருமஞ்சனம் இன்று நடைபெற்றது. கல்வி அபிவிருத்திக்காகவும் மாணவர்களின் நினைவுத்திறனை பெருக்கவும் இந்த ஹோமத்தில் வேண்டப்படுகிறது.

இதில் புண்யாஹாவாசனம், நவகலச ஆவாஹந, ஆராதனம்,பூர்ணாஹீதி திருமஞ்சனம் ஆரம்பம் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்று மகாதீபாதாரனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அர்ச்சனை நடைப்பெற்றது. பின்னர் கோயில் உள் பிரகாரத்தில் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் ஹோம பூஜையில் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள்,கோயில் குருக்கள்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.