பா.ஜ.க. அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி, பிப். 28 தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
தமிழக மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக அரசை கண்டித்து, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கின்றது தொடர்ந்து அவர்களது படகுகளை சேதப்படுத்துகிறது மீனவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு செயல்படவில்லை எனக் கூறி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.