திருமங்கலத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

0 201
Stalin trichy visit

திருச்சி, பிப். 29  திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலத்தில் அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம்  நேற்றிரவு 7.30 மணியளவில் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் அசோகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை கடந்த 24-ம் தேதி தமிழக முழுவதும் அதிமுக நிர்வாகிகள் அவரது திருஉருவ படத்திற்கும் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லால்குடி அருகே திருமங்கலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்திற்கு லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் லால்குடி புள்ளம்பாடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்ட, வார்டு கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், செயல்வீரர்கள் வீராங்கனைகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.